பொழுதுபோக்குசினிமா

பாகுபாடின்றி வதைக்கும் கொரோனா! – சூப்பர் ஸ்டார்களுக்கும் தொற்று

Share
202201161608250922 1 vjs. L styvpf
Share

இந்தியாவில் கொரோனாவின் அடுத்த அலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னைய அலைகளை விட தற்போதைய அலை திரை நட்சத்திரங்களை பெருமளவில் ஆட்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், மலையாள பிரபல இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நடிகர் மம்முட்டி ” எச்சரிக்கையுடன் செயற்பட்டும் நான் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதிகாரிகளின் ஆலோசனைப்படி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தியுள்ளேன். மக்கள் அமைவரும் முகக்கவசம் அணிந்து அவதானமாக செயற்படுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் உலகநாயகன் கமலஹாசன், வைகைப்புயல் வடிவேலு ஆகியோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபலங்களான நடிகை மீனா, த்ரிஷா, குஷ்பு, நடிகர் சத்யராஜ், அருண்விஜய் என பலருக்கும் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...