இந்தி திரையுலகின் நாயகி முர்னல் தாகூர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
மராட்டி மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை முர்னலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில்,
எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் கவனமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
#CinemaNews
Leave a comment