முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரபல நட்சத்திரங்கள் அதிகம் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்படுகின்றனர்.
அண்மையில் கமல்ஹாசன், வடிவேலு, குஷ்பு, விக்ரம்,சூர்யா, அருண் விஜய், மீனா, சத்யராஜ், போன்ற பலருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ்ற்கு கொரோனா உறுதியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கீர்த்தி சுரேஷ் தனது ருவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் சிறிய அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக இருங்கள். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உங்கள் அன்புக்குறியவர்களுக்காகவும் நோய் தொற்றின் குறைந்த வீரியத்திற்காகவும் உடனடியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
#Cinema
Leave a comment