chicken chukka 888
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

ரேஸ்ட்ரியான கோழி சுக்கா

Share

ரேஸ்ட்ரியான கோழி சுக்கா

கோழி சுக்கா சாதம் மற்றும் சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட சுவை அள்ளும்.

தேவையானவை

கோழி – 500 கிராம்

சிகப்பு மிளகாய் – 8

பெரிய வெங்காயம்  – 2

பச்சைமிளகாய் – 3

இஞ்சி பூண்டு விழுது– 2 கரண்டி

மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி

மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

நல்லெண்ணெய் – 5 மேசைக்கரண்டி

கொத்தமல்லி, கறிவேப்பிலை – ஒரு பிடி

 

செய்முறை

கோழித் துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் போட்டு புரட்டி 10 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.
பின் சிவப்பு மிளகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

வெங்காயம் பச்சை மிளகாயை அளவாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும். பின் அதனுடன் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது, மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள்.

இஞ்சிப் பூண்டு வதங்கியதும் சிக்கனையும் போட்டு பிரட்டுங்கள்.

பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி விடுங்கள்.

மசாலா பொருள்கள் அனைத்தும் நன்கு சேர்த்து பிரட்டி மூடி விடுங்கள்

தீயை மிதமாக வைத்து 20 நிமிடங்கள் வேக விடுவங்கள். இடையிடையே கிளறியும் விடுங்கள்.

நன்றாக சுண்டி சிக்கன் வெந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்குங்கள்.

சுவையான சிக்கன் சுக்கா ரெடி

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 5
பொழுதுபோக்குசினிமா

விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் சர்ச்சை பேச்சு: நயன்தாராவை இழுத்து விமர்சித்ததால் பரபரப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த...

13 15
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’: ரவிமோகன் – கங்கனா ரனாவத் கூட்டணியின் பிளாக்பஸ்டர் ரீ-ரிலீஸ்!

இயக்குநர் ஜீவாவின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தாம் தூம்’...

04 16
பொழுதுபோக்குசினிமா

ஆஸ்கர் மேடையில் தமிழ் மின்னல்: ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சரித்ரா சந்திரன்!

ஹொலிவூட் திரையுலகின் உயரிய விருதான 2026 ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு ஒரு தமிழ்...

03 17
பொழுதுபோக்குசினிமா

சர்ச்சைகளும் நெகிழ்ச்சியும்: மீண்டும் வைரலாகும் நடிகர் பார்த்திபனின் மேடைப் பேச்சு!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில்...