masala omelette 8768768
சமையல் குறிப்புகள்

சுவையான மஸாலா ஆம்லெட்

Share

இரவு உணவுடன் பரிமாற இலகுவில் சுவையாக தயாரிக்கக் கூடிய மஸாலா ஆம்லெட்

குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

முட்டை – 4

கொத்தமல்லி இலை– 2 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 3

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

கரம்மஸாலாத்தூள் – அரை தேக்கரண்டி

சீரகம் – 2 தேக்கரண்டி

தக்காளி – 2

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி

முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதனுள் உப்பு, மிளகாய்த்தூய், மசாலாத்தூள் போட்டு நன்றாக அடிக்க வேண்டும்.

பின் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் சட்டியை வைத்து அதனுள் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து பின் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி கொத்தமல்லி இலைகளை போட்டு வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் அதனை இறக்கி முட்டைக் கலவையுடன் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

பின் தோசைக்கல்லை காயவைத்து இந்த முட்டையின் கலவையை சிறிதளவு எடுத்து பரவலாக ஊற்றி சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றவும். திருப்பிப் போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilni 363 scaled
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..!

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..! இலங்கையில் நாளாந்தம் மாறுபடும் முட்டை விலையால் அதனை வாங்கி...

download 3 1 14
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பலூடா ஐஸ்கிறீம் ரெசிபி!

தேவையான பொருட்கள் ஐஸ்கிரீம் செய்ய பால் – 1 கப் ஓரம் நீக்கப்பட்ட பிரெட் –...

ezgif 5 a9f79e7907
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

வீட்டிலேயே செய்யலாம் கிளி பரோட்டா

சால்னாவுடன் சிக்கன் அல்லது மட்டன் தொக்கை வைத்து அதன் மேல் பரோட்டாவை பிரித்து போட்டு வாழை...

tomoto rice
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் அரிசி – ஒரு கப் பெரிய வெங்காயம் – 2 தக்காளி –...