சளி மற்றும் இருமல் தொல்லையை போக்க வீட்டிலேயே மிளகு குழம்பு சிறந்த மருந்தாகும்.
தேவையான பொருட்கள் :
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம், கடலைப் பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
கடுகு, பெருங்காயத்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவைக்கு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை:
தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.
தனியா, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
பின்னர் மிக்சியில் கொட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள பொருட்களை போட்டு வதக்கவும். அதனுடன் புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கொதிக்க தொடங்கி எண்ணெய் பிரிந்து வந்தபிறகு இறக்கி பரிமாறலாம்.
#LifeStyle
Leave a comment