சுவையான வெங்காய குருமா!

Onion Kurma

வெங்காய குருமா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள் :

பெ.வெங்காயம் – 4
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
கடலை பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – 1 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
சோம்பு தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள், மஞ்சள் தூள் – சிறிதளவு
மல்லித்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கு

செய்முறை:

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அதனுடன் கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி, மிளகாய், சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிடவும்.

நன்கு வெந்ததும் கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

மீண்டும் கொதிக்க தொடங்கியதும் கொத்தமல்லி தூவி கீழே இறக்கி பரிமாறலாம்.

சூப்பரான வெங்காய குருமா ரெடி.

Exit mobile version