சமையல் குறிப்புகள்

கொத்து பரோட்டா

koththu 1
Share

தேவையான பொருள்கள்:

பரோட்டா – 2
முட்டை – 1
வெங்காயம் – 2
எண்ணெய் – 4 ஸ்பூன்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
பூண்டு – 8 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் –
1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.

செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும்.

அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.

துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.

10 நிமிடம் கழித்து கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

சுட சுட சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா தயார்.

இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilni 363 scaled
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..!

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..! இலங்கையில் நாளாந்தம் மாறுபடும் முட்டை விலையால் அதனை வாங்கி...

download 3 1 14
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பலூடா ஐஸ்கிறீம் ரெசிபி!

தேவையான பொருட்கள் ஐஸ்கிரீம் செய்ய பால் – 1 கப் ஓரம் நீக்கப்பட்ட பிரெட் –...

ezgif 5 a9f79e7907
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

வீட்டிலேயே செய்யலாம் கிளி பரோட்டா

சால்னாவுடன் சிக்கன் அல்லது மட்டன் தொக்கை வைத்து அதன் மேல் பரோட்டாவை பிரித்து போட்டு வாழை...

tomoto rice
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் அரிசி – ஒரு கப் பெரிய வெங்காயம் – 2 தக்காளி –...