ஆரோக்கிய உணவாக வீட்டிலேயே ‘சிக்கன் சாண்ட்விச்’ செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறலாம்.
சாண்ட்விச் தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலம்.
அதிலும் குறிப்பாக சிக்கன் சாண்ட்விச் என்றால் கேட்கவே தேவையில்லை. பெரும்பாலும் மாலை நேர உணவாகவும் உண்ணப்படுகிறது. ஆனால் இவை மதிய மற்றும் இரவு நேர உணவாக உண்ணவும் உகந்தது.
தேவையானவை
எலும்பில்லாத சிக்கன் -– 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் -தேவையான அளவு
பாண் துண்டுகள் – 6
தக்காளி சோஸ் – தேவையான அளவு
பட்டர் – – சிறிதளவு
கொத்தமல்லி – – சிறிதளவு
செய்முறை
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு வெண்ணெய் ஏற்றி வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் சுத்தம் செய்து வைத்துக் கொண்ட எலும்பில்லாத சிக்கன், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி வேகவைத்துக் கொள்ளுங்கள்.
பின் வறுத்த பாணின் ஒரு பக்கத்தில் தக்காளி சோஸ் தடவி அதன் மீது பட்டர் வைத்து பின் சிக்கன் கலவையை வைத்து கொத்தமல்லி தழை தூவி பின் இன்னொரு பாண் துண்டில் பட்டர் தடவி அதன் மேல் வைத்து பரிமாறவும்.
இப்பொழுது சுவையான சிக்கன் சாண்ட்விச் தயார்.
#Cooking