பூஜா ஹெக்டே சமீபத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த போது பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி அதிக செலவு வைத்து சர்ச்சையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் பெற்றோருடன் வசித்து வரும் இவர் படப்பிடிப்புக்காக சென்னை அல்லது ஐதராபாத்துக்கு வரும்போது தன்னுடன் சிகை அலங்கார நிபுணர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட 10 முதல் 12 உதவியாளர்களை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்காக அநாவசியமான செலவுகளை செய்ய கூடாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டு இருந்ததாம்.
சமீபத்தில் படத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது அதிக உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பட நிறுவனத்தின் பணத்தில் பூஜா ஹெக்டே செலவு செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து உதவியாளர்களுக்கான ஓட்டல், சாப்பாடு உள்ளிட்ட செலவு பில்களை பூஜா ஹெக்டேவுக்கு அனுப்பி அந்த பணத்தை திருப்பி தரவேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பூஜா ஹெக்டே பணத்தை கட்டி விட தயாராகி வருவதாகவும் பேசப்படுகிறது.
#Cinema