சினிமாபொழுதுபோக்கு

சர்வதேச திரைப்பட விழாவின் நடுவராக தீபிகா படுகோனே – குவியும் வாழ்த்துக்கள்

deepika
Share

சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகப் பிரபலமானதும் முக்கியமானதுமான விழாவாகக் கருதப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவிற்கு பாலிவூட் நடிகையான தீபிகா படுகோனே நடுவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தீபிகாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவூட் மட்டுமல்லாது ஹாலிவூட் திரையுலகிலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தீபிகா படுகோனே.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான “கெகாரியான்“ திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து கணவர் ரன்வீர்குடன் “சர்க்கஸ்“ திரைப்படத்திலும், ஷாருக்கான் நடிக்கும் “பதான்“ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து “புரொஜெக்ட் கே“ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்திய சினிமேவின் உச்ச நட்சத்திரமான தீபிகா தற்போது சர்வதேசத் திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவின் சிறப்பு நடுவர் குழுவில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா எதிர்வரும் மே 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் உலகலாவிய றெதியில் வெளியான 22 சிறந்த திரைப்படங்கள் தெரிவுசெய்யப்பட்டு திரையிடப்படும்.

இதேவேளை, சிறந்த படங்களுக்கான palme d Or விருதும் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கான சிறந்த படத்தை தெரிவு செய்வதற்காக, 8 பிரபலங்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக பிரெஞ்ச் நடிகர் வின்சென்ட் லிண்டன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், Iron man 3 படத்தின் நாயகி ரெபேக்கா ஹால் மற்றும் இயக்குநர் ஜேப் நிக்கோலஸ் ஆகியோர் முக்கிய நபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

இதேவேளை, நடுவர் குழுவில் அங்கம்வகிக்கும் ஏனைய பிரபலங்களில் ஒருவராக இந்திய பிரபலமான நட்சத்திரம் தீபிகா படுகோனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20181

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...