சினிமாபொழுதுபோக்கு

கண்டிஷன் போட்ட மாயா.. மனம்மாறிய விசித்ரா.. அர்ச்சனாவை டேக் செய்து தரமான பதிலடி!

Share
tamilnic 3 scaled
Share

கண்டிஷன் போட்ட மாயா.. மனம்மாறிய விசித்ரா.. அர்ச்சனாவை டேக் செய்து தரமான பதிலடி!

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா, தற்போது பேட்டி கொடுத்து வருகின்றார். அதில், விசித்ரா பற்றியும் தனது கருத்துக்களை பேசி இருந்தார்.

இந்த நிலையில், அர்ச்சனா பேசியவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார்.

அதன்படி அர்ச்சனா பேட்டியளிக்கும் போது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் எனக்கு ரொம்பவும் சப்போர்ட்டா இருந்தது விசித்ரா அம்மா தான். அவங்க இல்லை என்றா நான் எப்போவோ உடைஞ்சி போய் இருப்பன். அவங்க தான் என்ன பாதுகாத்து வந்தாங்க. ஆனாலும் ஒரு கட்டத்தில் அவங்க மனச யாரோ மாத்திட்டாங்க.

ஆனா விசித்ரா அம்மா நினைச்சு இருந்தா நேரா வந்து கேட்டு இருக்கலாம். அவங்க கேக்கல. இப்போ நான் வெளிய வந்த பிறகும் எல்லாரும் போன் பண்ணி கதைச்சாங்க. விசித்ரா அம்மா மட்டும் பேசல. நானும் அவங்களுக்கு போன் பண்ணி தொந்தரவு கொடுக்க மாட்டன் என்று சொல்லி இருந்தார்.

இந்த நிலையில், விசித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அர்ச்சனாவை டேக் செய்துள்ளார்.

குறித்த instagram ஸ்டோரியில், தான் எதற்காக அர்ச்சனாவிடமிருந்து பிரிந்தேன் என்பதை அதில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அதாவது அதில், மாயாவும் விசித்திராவும் பேசும் போது, நீங்க யாரையும் நம்பாதிங்க, உங்களைப் பற்றி முதுகுக்கு பின்னாடி நிறைய பேசுறாங்க. நீங்க உங்களுக்காக விளையாடுங்க, உங்களை மட்டும் நேசியுங்கள். தேவையில்லாமல் அதிக அழுத்தத்தை மண்டையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்காதீர்கள் என்று மாயா அட்வைஸ் செய்து இருக்கிறார்.

தற்போது இந்த வீடியோவில் அர்ச்சனாவை விசித்திரா டேக் செய்து வைத்திருக்கிறார். அதனால் மாயா தான் என்னுடைய மனதை மாற்றிவிட்டார் என்று சொல்லாமல் சொல்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...