நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு ’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.
செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து , அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இந்தப்படத்துடன் பல படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் மற்றும் நிதி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள தான் ஹரிஹர வீர மல்லு, தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது.
மெஹெர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம் ‘போலா ஷங்கர்’. இந்த படத்தில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தெலுங்கில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார்,தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது.
இதுபோன்ற படங்கள் பொங்கலுக்கு மோதவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
#Vijya #Varisu #Cinema
Leave a comment