தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த திரைப்படம் தெறி.
அட்லீ இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் தளபதி விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, மகேந்திரன், பிரபு, மொட்டைராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தெறி. 100 கோடிக்கு மேல் வசூலையும் பெற்றது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது
தெலுங்கு ரீமேக்கில், விஜய் நடித்த பொலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஏனைய நடிகர் நடிகைகள் தெரிவு இடம்பெற்று வருகிறது எனவும் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் கூறப்படுகிறது.
#CinemaNews
Leave a comment