download 14 1 5
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் !

Share

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் !

சருமப் பராமரிப்புக்கான கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப்படுவது ‘கோகோ பட்டர்’. கோகோ விதைகளில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு நிறைந்த மஞ்சள் நிறப் பொருளே ‘கோகோ பட்டர்’ என அழைக்கப்படுகிறது. இதில் நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன.

பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு, காப்பர் மற்றும் பல தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன. கோகோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலங்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன.

இதில் இருக்கும் ‘பைட்டோ கெமிக்கல்கள்’ எனப்படும் இயற்கை தாவர மூலக்கூறுகள், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. எக்ஸிமா மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோகோ பட்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்களை உபயோகப்படுத்தினால் எளிதாக குணம் அடையலாம்.

சருமத்தின் மீது கோகோ பட்டரை நேரடியாகப் பயன்படுத்தும்போது, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். கோகோ பட்டரில் ஒலிக், பால்மிடிக், லினோலிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் உள்ளன. இவை சேதமடைந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கி, புதிய சரும அடுக்குகளை உருவாக்குகின்றன. சருமத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை மென்மையாக்கி மறைக்கும் தன்மை கோகோ பட்டரில் உள்ள மூலக்கூறுகளுக்கு உண்டு. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்பும், பெண்கள் கோகோ பட்டரை உபயோகப்படுத்தினால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கலாம்.

#Beauty

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1851465 rajinikanth
சினிமாபொழுதுபோக்கு

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது: 50 ஆண்டு கால சினிமாச் சேவைக்காக கௌரவம்!

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International...

featureabhinay 1762758724
சினிமாபொழுதுபோக்கு

துள்ளுவதோ இளமை பட நடிகர் அபிநய் காலமானார்: உடல்நலக் குறைவால் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

பிரபலத் தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகர் அபிநய் (Abhinay) இன்று (நவம்பர் 11) காலமானதாக...

image d3b04ad29c
பொழுதுபோக்குசினிமா

நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் நிடிமொரு காதலா?: புதிய வர்த்தக வெளியீட்டு விழாவில் நெருக்கமான புகைப்படம் வைரல்!

நடிகை சமந்தா பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த...

125184983
சினிமாபொழுதுபோக்கு

விஜய் – எச். வினோத் இணையும் ‘ஜனநாயகன்’: முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ வெளியீடு – 18 மணி நேரத்தில் 8.9 மில்லியன் பார்வைகள்!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தளபதி...