india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

Share

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று மலவளையம் வைத்துத் தனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள மறைந்த இயக்குநரின் இல்லத்திற்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர், பாரதிராஜாவின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

திரைத்துறையில் பாரதிராஜா ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையிலும், அவருக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் அவரது இறுதிப் பயணத்தின் போது முழு அரசு மரியாதை (Full State Honours) வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகினரின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று, அரசாங்கத்தினால் இந்த கௌரவம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜாவின் மறைவு குறித்து முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கற் செய்தியில், கிராமிய வாழ்வியலின் உன்னதத்தை வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் பாரதிராஜா என்று உருகமாகப் பதிவிட்டுள்ளார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்குத் திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தொடர்ந்து நேரில் சென்று தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர். திரையுலகில் பல தலைமுறை கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்குரிய இந்த மாபெரும் இயக்குநரின் இறுதிச் சடங்குகள், அரசு மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...

Untitled 44
சினிமாபொழுதுபோக்கு

ஆர்த்தி ரவிக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கப் பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையே நிலவி வரும் விவாகரத்து...