சினிமாசெய்திகள்

புத்தாண்டில் மகிழ்ச்சியான தகவல் : மரணதண்டனையை முற்றாக இரத்து செய்த நாடு

11
Share

புத்தாண்டில் மகிழ்ச்சியான தகவல் : மரணதண்டனையை முற்றாக இரத்து செய்த நாடு

மரண தண்டனையை ரத்து செய்யும் சட்டத்திற்கு சிம்பாப்வே(Zimbabwe) ஜனாதிபதி எம்மர்சன் மனங்காக்வா (Emmerson Mnangagwa)அனுமதி அளித்துள்ளார். சிம்பாப்வேயின் இந்த முடிவை “பிராந்தியத்தில் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்திற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமென” சர்வதேச மன்னிப்புச்சபை பாராட்டியது, ஆனால் அவசரகால நிலையின் போது மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தலாம் என்று அது வருத்தம் தெரிவித்தது.

மரண தண்டனையை ரத்து செய்வதற்காக சிம்பாப்வே நாடாளுமன்றம் டிசம்பரில் வாக்களித்ததை அடுத்து, மங்கக்வாவின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. சிம்பாப்வே கடைசியாக 2005 இல் தூக்கிலிடப்பட்ட மரணதண்டனையை நிறைவேற்றியது.

ஆனால் அதன் நீதிமன்றங்கள் கொலை போன்ற கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனையை தொடர்ந்து வழங்குகின்றன. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 60 பேர் மரண தண்டனையில் இருந்தனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களால் அவர்களுக்கு மீண்டும் தண்டனை விதிக்கப்படும், நீதிபதிகள் அவர்களின் குற்றத்தின் தன்மை, மரண தண்டனை தீர்ப்பு விதிக்கப்படட்டதில் இருந்து அவர்கள் செலவழித்த நேரம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளை பரிசீலிக்க உத்தரவிடுவார்கள் என்று அரசுக்கு சொந்தமான ஹெரால்ட் செய்தித்தாள் தெரிவிக்கிறது.

நீதி அமைச்சர் ஜியாம்பி ஜியாம்பி(Ziyambi Ziyambi), மரண தண்டனையை ஒழிப்பது “சட்ட சீர்திருத்தத்தை விட மேலானது; இது நீதி மற்றும் மனிதநேயத்திற்கான நமது உறுதிப்பாட்டின் அறிக்கை” என்றார்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது சிம்பாப்வேயில் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. 1960 களில் சுதந்திரத்திற்கான கொரில்லா போரின் போது தொடருந்தை வெடிக்கச் செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது சொந்த அனுபவத்தை மேற்கோள் காட்டி, மரண தண்டனையை நீண்டகாலமாக விமர்சிப்பவராக ஜனாதிபதி மங்கக்வா இருந்தார். பின்னர் அவரது தண்டனை 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது.

மரண தண்டனை ஒழிப்புச் சட்டம் செவ்வாய்க்கிழமையன்று அரசாங்க அரசிதழில் ஜனாதிபதி மங்கக்வா கையொப்பமிட்ட பிறகு வெளியிடப்பட்டது.

இந்த நடவடிக்கை சிம்பாப்வேக்கு “பெரிய முன்னேற்றம்” மட்டுமல்ல, “இந்த இறுதியான கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான தண்டனையை” முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச முயற்சிகளில் ஒரு “முக்கிய மைல்கல்” என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை கூறியது.

“எந்தவொரு பொது அவசரகால நிலைக்கும் மரண தண்டனையைப் பயன்படுத்த அனுமதிக்கும் மசோதாவின் திருத்தங்களில் சேர்க்கப்பட்டுள்ள ஷரத்தை அகற்ற” சிம்பாப்வே அதிகாரிகளை அது வலியுறுத்தியது.

உலகளவில், ஆபிரிக்காவில் உள்ள 24 நாடுகள் உட்பட 113 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...