இனிமேல் உங்களுக்கு வேலையில்லை, நீங்க போகலாம்.. மேனேஜர் ஜெகதீஷை வீட்டுக்கு அனுப்பிய விஜய்..!

tamilni Recovered 24

இனிமேல் உங்களுக்கு வேலையில்லை, நீங்க போகலாம்.. மேனேஜர் ஜெகதீஷை வீட்டுக்கு அனுப்பிய விஜய்..!

தளபதி விஜய்க்கு கடந்த பல ஆண்டுகளாக ஜெகதீஷ் என்பவர் மேனேஜராக உள்ளார் என்பதும் சினிமாவில் விஜய் சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்துமே அவர்தான் கவனித்துக் கொள்கிறார் என்பதும் தெரிந்தது.

விஜய்யின் சம்பளம் முதல் கால்ஷீட் கொடுப்பது முதல் அனைத்து பணிகளையும் அவர் சரியாக செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவர் வேலையில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து முடித்துவிட்டு திரையுலகில் இருந்து  விலகி அரசியலுக்கு செல்ல உள்ளதை எடுத்து ஜெகதீஷ்அரசியல் சம்பந்தப்பட்ட பணிகளை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விஜய் மிகவும் தெளிவாக சினிமா என்பது வேறு அரசியல் என்பது வேறு, நீங்கள் என்னுடைய சினிமா பணிகளை இதுவரை பார்த்தது வரை ஓகே, அரசியல் சம்பந்தப்பட்ட பணிகளில் நீங்கள் எதையும் செய்ய வேண்டாம், எனவே ’தளபதி 69’ படம் முடிந்ததும் நீங்கள் வேலையில் இருந்து நின்று கொள்ளலாம் என ஜெகதீஷிடம் விஜய் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக விஜய்க்கு நெருக்கமாக இருந்த ஜெகதீஷை திடீரென விஜய் நீக்க போகிறார் என்ற தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை விஜய் மீண்டும் திரை உலகிற்கு வந்தால் அப்போது ஜெகதீஷை திரும்பவும் விஜய் அழைத்துக் கொள்வார் என்றும் அரசியலைப் பொருத்தவரை தனியாக ஒரு டீம் அமைக்க அவர் திட்டமிட்டதாகவும் சினிமாவையும் அரசியலையும் குழப்ப அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

விஜய் எடுத்தது மிகவும் தெளிவான முடிவு என்றும் அவர் தொலைநோக்கு பார்வையுடன் சில முடிவுகளை எடுப்பதை பார்த்தால் கண்டிப்பாக அவர் அரசியலிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Exit mobile version