2 1 scaled
சினிமாசெய்திகள்

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா முக்கிய தகவல்: வெளியாகியுள்ள புகைப்படம்

Share

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா முக்கிய தகவல்: வெளியாகியுள்ள புகைப்படம்

கேப்டன் விஜயகாந்த் விரைவில் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்த் உடல்நல பின்னடைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அவரது உடல் நலம் குறித்து பல்வேறு மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் இணையத்தில் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மருத்துவமனையில் பார்க்க சென்ற நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஆர். கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்ட திரையுலகத்தினர், தயவுசெய்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை பரப்பாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
5 19
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்காக கொழும்பில் தேடப்படும் வீடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தங்குவதற்காக கொழும்பில் வீடொன்று தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

4 18
இலங்கைசெய்திகள்

உப்பு தட்டுப்பாட்டுக்கு அமைச்சரவையை குற்றம் சுமத்தும் உற்பத்தியாளர்கள்

உப்பை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை முடிவை செயற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே, நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள...

3 19
இலங்கைசெய்திகள்

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை

யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த...

2 27
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் – கழன்றோடிய சக்கரம்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த...