3 13 scaled
சினிமாசெய்திகள்

தலைவா படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன தெரியுமா! இயக்குனர் கூறிய தகவல்

Share

தலைவா படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் என்ன தெரியுமா! இயக்குனர் கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது.

GOAT திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 69. இது அவருடைய கடைசி படம் என்றும் செல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் 69வது படம் தான் விஜய்யின் கடைசி படமாக அமையும் என்கின்றனர்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய், அமலா பால், சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சில அரசியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்த காரணத்தினால் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிரவிருந்த இப்படம் 10 நாட்களுக்கு பின் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளிவந்தது.

இந்த நிலையில், இப்படத்திற்கு முதன் முதலில் தலைவன் என்று தான் டைட்டில் வைத்துள்ளனர். ஆனால், அது சில காரணங்களால் அந்த டைட்டில் கிடைக்காமல் போய்விட்டது. பின் தலைவா படத்திற்கு ‘தளபதி’ என தலைப்பு வைத்துள்ளனர்.

ஏற்கனவே மணி ரத்னம் – ரஜினி கூட்டணியில் தளபதி எனும் படம் வெளிவந்துள்ளதால். அதை முறையாக ரைட்ஸ் வாங்கி இப்படத்தில் வைக்க வேண்டும் என முயற்சி செய்துள்ளனர்.

மணி ரத்னதிடமும் இதை குறித்து கேட்க வேண்டும் என இயக்குனர் விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி மணி ரத்தனத்தை நேரில் சந்தித்த போது மணி ரத்னம் ‘விஜய் உன்னுடைய படத்திற்கு ஒரு தனி அடையாளம் இருக்கிறது, தளபதி படத்திற்கும் தனி அடையாளம் இருக்கிறது.

இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்’ என கூறினாராம். பின் அந்த டைட்டில் வைக்காமல், இறுதியாக தான் தலைவா என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இதனை இயக்குனர் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...