24 66bf2a2a7cb01
சினிமா

உயிர் உள்ள வரை மறக்க மாட்டோம்.. காமெடி நடிகர் மகனுக்கு உதவிய விஜய் சேதுபதி

Share

உயிர் உள்ள வரை மறக்க மாட்டோம்.. காமெடி நடிகர் மகனுக்கு உதவிய விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.

இவர் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வெளி வந்த படம் தென்மேற்குப் பருவக்காற்று. இந்த படத்திற்கு பிறகு தமிழில் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், விக்ரம், வேதா, காத்துவாக்குல இரண்டு காதல், மாஸ்டர் போன்ற பல்வேறு படங்களில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார்.

இதை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ரூ.1100 கோடி வசூல் ஈட்டியது. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த மகாராஜா படமும் மாபெரும் ஹிட் கொடுத்தது. இவ்வாறு பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய் சேதுபதி. நிஜத்திலும் மாஸ் ஹீரோவாக இருக்கிறார்.

அதற்கு சான்றாக, காமெடி நடிகர் தெனாலியின் மகன் வின்னரசனுக்கு ரூ. 76 ஆயிரம் கல்லூரியில் ஃபீஸ் கட்டியுள்ளார் விஜய் சேதுபதி. அதாவது தெனாலியின் மகன் வின்னரசன் டாக்டர் எம்ஜிஆர் யுனிவர்சிட்டியில் பிசியோதெரபி படித்து வருகிறார்.

தெனாலியால் தன் மகன் கல்லூரி ஃபீஸ் செலுத்த முடியவில்லை. இதனை அறிந்த விஜய் சேதுபதி அந்த கட்டணத்தை செலுத்தி தெனாலிக்கு உதவியுள்ளார். இதற்கு தெனாலி நானும் என் மகனும் விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...