டாப் ஸ்டாருக்காக ஒன்றிணைந்த விஜய், பிரபு தேவா, விஜய் சேதுபதி, அனிருத்.. வேற லெவல் மாஸ்
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களில் ஒருவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் வெளிவந்த அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன்.
இப்படத்தை நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஆனால், இதில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் என்னவென்றால் இப்பாடலை தளபதி விஜய் தான் வெளியிடவுள்ளாராம். வருகிற 24ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். மேலும் பிரபு தேவா தான் இதற்கான கான்சப்ட் செய்துள்ளார்.
நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் இப்பாடலுக்கு choreography செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் டாப் ஸ்டார் பிரஷாந்துக்காக விஜய், விஜய் சேதுபதி, பிரபு தேவா மற்றும் அனிருத் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்துள்ளனர்.