படப்பிடிப்பில் அஜித்துக்காக சாப்பாடு கொடுத்த விஜய்யின் தாய் சோபா சந்திரசேகர்.. சுவாரஸ்ய தகவல்

24 66471ac08e507

படப்பிடிப்பில் அஜித்துக்காக சாப்பாடு கொடுத்த விஜய்யின் தாய் சோபா சந்திரசேகர்.. சுவாரஸ்ய தகவல்

தமிழ் சினிமாவில் இரு தூண்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பும், மோதலும் இருந்தாலும், இவர்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகி வருகிறார்கள் என பலரும் கூறி வருகின்றனர்.

விஜய் – அஜித் இருவரும் இணைந்து இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான் நடித்துள்ளனர். அது ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படம் ஆகும். இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இனிமேல் நடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறதா என தெரியவில்லை.

இந்த நிலையில், ராஜாவின் பார்வையிலே படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து அஜித் நடித்த வந்த சமயத்தில், விஜய்க்கு மட்டுமின்றி அஜித்துக்கு சேர்த்து சாப்பாடு சமைத்து அனுப்புவாராம் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர்.

இதனை குஷி இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட அஜித், வெளிப்படையாக மேடையில் கூறினாராம். அஜித் இப்படி சொன்னவுடன் ஷோபா மிகவும் மகிழ்ச்சியடைந்தாராம். சமீபத்தில் ஷோபா சந்திரசேகர் அளித்த பேட்டியில், இந்த சம்பவம் குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version