அஜித்தை அசர்பைஜானில் சந்தித்த வெங்கட் பிரபு.. விஜய் உடன் இருந்தாரா?
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அசர்பைஜான் நாட்டிற்கு சென்று இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஷூட்டிங்கில் அங்கு அஜித் ஓட்டிய கார் விபத்தில் சிக்கி இருந்த வீடியோவும் வெளியாகி இருந்தது.
அதன் பிறகு சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் அசர்பைஜான் நாட்டில் தொடங்கியது.
இந்நிலையில் அசர்பைஜான் சென்று அஜித்தை நேரில் சந்தித்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் தற்போது விஜய் நடிக்கும் GOAT படத்தை இயக்கி வரும் நிலையில் திடீரென அஜித்தை சந்தித்து இருக்கும் போட்டோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
விஜய்யும் உடன் இருந்தாரா என ரசிகர்கள் தற்போது வெங்கட் பிரபுவிடம் கேட்டு வருகின்றனர். அப்படி இருந்தால் அஜித் – விஜய் ஒன்றாக இருக்கும் போட்டோவை வெளியிடுங்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.
Comments are closed.