நடிகை வனிதா விஜயகுமாரின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா
வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான். பெரிய இடத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் தனித்து விடப்பட்டார்.
சமீபத்தில் நடந்த விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணத்திற்கு கூட வனிதாவுக்கு அழைப்பு இல்லை.
வனிதா தனி ஆளாக தான் நடிப்பு, youtube சேனல், துணிக்கடை பிஸ்னஸ் என பலவற்றை செய்து வருகிறார். அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களும் அதன் பின் பிரிந்துவிட்டனர். பீட்டர் பால் உடல்நலக்குறைவால் கடந்த வருடம் மரணம் அடைந்தார்.
அடுத்த திருமணம் எப்போது என வனிதாவை நக்கலாக பலரும் கேள்வி எழுப்புவதும் உண்டு. அதற்கெல்லாம் அவர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்.
வனிதாவின் மகள் ஜோவிகா கடந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதன் பின் தற்போது ஜோவிகா படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
வனிதா விஜயகுமார் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்று நன்றாக சம்பாதித்து வருகிறார்.
அடிக்கடி வெளிநாட்டிற்கு மகள்கள் உடன் ட்ரிப் சென்று வருகிறார். சென்னையில் சொந்தமாக வீடு, கார், துணிக்கடை அவருக்கு இருக்கிறது.
வனிதா விஜயகுமார் தனியாளாக இதுவரை சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு சுமார் 7.3 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
வனிதா விஜயகுமார் இதை படங்கள், youtube சேனல் வருமானம், துணிக்கடை வருமானம் ஆகியவற்றின் மூலமாக தான் சம்பாதித்து உள்ளார்.
- actress vanitha vijayakumar
- biggboss vanitha
- vanitha
- vanitha vijayakumar
- vanitha vijayakumar channel
- vanitha vijayakumar fight
- vanitha vijayakumar interview
- vanitha vijayakumar interviews
- Vanitha Vijaykumar
- vanitha vijaykumar interviews
- vanitha vijaykumar latest
- vanitha vijaykumar latest interview
- vanitha vijaykumar movies
- vanitha vijaykumar official
- vantha vijayakumar