இளையராஜா பயோபிக் படத்தில் வைரமுத்து? பல வருட கேள்விக்கு விடை கிடைக்குமா?
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படம் தான் இளையராஜாவின் பயோபிக். இது தொடர்பான தகவல்கள் சமீப காலமாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இசைஞானி இளையராஜா இளம் வயதில் எப்படி இருந்தாரோ அதேபோன்ற லுக்கில் தனுஷின் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இந்தப் படத்தின் போஸ்டரை சமீபத்தில் படக் குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அந்த போஸ்டரில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாகவே காணப்பட்டது. அத்துடன் இந்த படத்தில் வைரமுத்து, ஏ.ஆர் ரகுமான் ஆகிய இருவரின் கதையும் இடம்பெறுமா? என்ற கேள்வியும் பலருக்கு எழுந்துள்ளது.
ஏனென்றால் இளையராஜாவை ஓரம் கட்டி ஆஸ்கார் விருதை வென்றவர் தான் ஏ.ஆர் ரகுமான். அதுபோல இளையராஜாவும் வைரமுத்துவும் ஏற்கனவே புன்னகை மன்னன், மண்வாசனை, முதல் மரியாதை போன்ற படங்களில் இருந்து பணியாற்றி உள்ளார்கள். ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணத்தால் இருவரும் எந்த நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. அவ்வாறு கலந்து கொண்டாலும் பேசிக் கொள்வதில்லை.
இந்த நிலையில், தற்போது இளையராஜாவின் படத்தில் வைரமுத்துவின் கதாபாத்திரம் இடம் பெறும் என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் வைரமுத்துவின் கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதேவேளை, இளையராஜா , வைரமுத்துவின் பிரிவிற்கு இதுவரையில் என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை. பலர் பலவிதமான காரணங்களை சுட்டிக்காட்டி இருந்தாலும் உண்மை என்ன என்பது அவர்கள் இருவர்க்க மட்டும் தான் தெரியும். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையிலான பிரிவின் மர்மம் பற்றி இந்த படத்தில் கட்டவிழ்க்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- dhanush ilayaraja biopic
- ilaiyaraaja biopic
- ilaiyaraaja biopic launch
- ilaiyaraaja biopic movie launch
- ilaiyaraaja biopic movie launch event
- ilayaraaja biopic
- Ilayaraja
- ilayaraja biopic
- ilayaraja biopic dhanush
- ilayaraja biopic movie
- ilayaraja biopic movie launch
- isaigani ilaiyaraaja biopic
- isaigani ilaiyaraaja biopic launch
- isaigani ilaiyaraaja biopic movie launch
- isaigani ilaiyaraaja biopic movie launch event
- kamal speech ilayaraja biopic movie launch