25 6845624b38b32
சினிமாசெய்திகள்

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க

Share

விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் வடிவேலு பாலாஜி. நடிகர் வடிவேலு போலவே வேடமிட்டு அனைவரையும் சிரிக்க வைப்பதில் இவரை மிஞ்ச ஆளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பின் சிரிச்சா போச்சு மிகப்பெரிய அளவில் வடிவேல் பாலாஜிக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. கோலமாவு கோகிலா, சுட்ட பழம் சுடாத பழம் மற்றும் யாருடா மகேஷ் ஆகிய மூன்று திரைப்படங்களில் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார்.

இவருக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீகாந்த் என்ற மகனும், ஸ்ரீதேவி என்கிற மகளும் உள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவருடைய மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை திரையுலகில் உள்ள அனைவருக்கும் தந்தது.

பாலாஜியின் பிள்ளைகளின் படிப்பு செலவுகளை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், தனது தந்தையை போலவே கெட்டப் போட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெற்றிகொடிக்கட்டு படத்தில் வரும் துபாய் return வடிவேலு போல், வடிவேல் பாலாஜி கெட்டப் போட்டு பல மேடைகளில் நகைச்சுவை செய்துள்ளார். அதை யாராலும் மறக்கவே முடியாது. அந்த கெட்டப்பை தற்போது வடிவேல் பாலாஜியின் மகன் போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...