24 66f91f8898dfa
சினிமா

டாப் குக்கு டூப் குக் பைனல் : டைட்டில் வென்று ரூ. 20 லட்சம் பரிசை தட்டி தூக்கியது யார் தெரியுமா

Share

டாப் குக்கு டூப் குக் பைனல் : டைட்டில் வென்று ரூ. 20 லட்சம் பரிசை தட்டி தூக்கியது யார் தெரியுமா

சன் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரமாண்டமான முறையில் துவங்கிய நிகழ்ச்சி டாப் குக்கு டூப் குக். குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்படி விஜய் டிவியில் ஹிட்டானதோ, அதே போன்ற வடிவமைப்பில் இந்த நிகழ்ச்சியை உருவாக்கினார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளியின் 4 சீசன்களை இயக்கி வந்த மீடியா மேசன்ஸ் டீம், அங்கிருந்து வெளியேறிய நிலையில், சன் டிவியில் டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சியை துவங்கினார்கள். இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் களமிறங்கினார்.

மேலும் அதிர்ச்சி அருண், மோனிஷா, ஜி.பி. முத்து, தீபா, பரத், தீனா ஆகியோர் டூப் குக் ஆக என்ட்ரி கொடுத்தனர். முதல் இரண்டு எபிசோட்களில் வைகைப்புயல் வடிவேலுவின் என்ட்ரி நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றது.

இந்த நிலையில் வெற்றிகரமாக பல எபிசோட்களை கடந்து வந்த டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சியின் பைனல் போட்டி இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் நரேந்திர பிரசாத் மற்றும் நடிகை சுஜாதா ஆகியோர் டைட்டிலை வென்று ரூ. 20 லட்சம் பரிசை தொகையை தட்டி சென்றுள்ளனர். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...