25 6844fcdb271cf
சினிமாசெய்திகள்

மூன்று நாட்களில் உலகளவில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

நாயகன் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். மணி ரத்னம் – கமல் கூட்டணியில் உருவான இப்படம் இன்று வரை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நாயகன் வெற்றியை தொடர்ந்து இருவரும் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

38 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் திரைப்படத்திற்காக இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்தது. இதனால் தக் லைஃப் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உண்டானது. இவர்களுடைய கூட்டணி மட்டுமின்றி முதல் முறையாக கமலுடன் சிம்பு இணைந்து நடித்தாலும் படத்தை ஆவலுடன் திரையில் காண ரசிகர்கள் காத்திருந்தனர்.

கடந்த ஜூன் 5ம் தேதி திரைக்கு வந்த தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. ஒரு பக்கம் மோசமான விமர்சனம் இப்படத்திற்கு கிடைக்க, மறுபக்கம் நெட்டிசன்கள் இப்படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 67 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில் நல்ல வசூல் வந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் அப்படியே குறைந்துவிட்டது.

Share
தொடர்புடையது
25 6847f80489fb2
சினிமா

6 கிலோ தங்க நகைகள், 156 கிலோ வெள்ளி! நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் அனைவரும் பாலையா என்றுதான்...

25 6847f730f0e80
இலங்கைசெய்திகள்

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி , கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு...

images 6
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்....

25 6847df28bf8fe
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கதி: பெருந்தொகை டொலர்கள் நாசம்

அமெரிக்காவில் சிகோபி பகுதியில் இலங்கை உணவக லொறியான Island Spice தீவிபத்துக்குள்ளாகி முழுமையாக சேதமடைந்துள்ளது. அதன்...