வலிமை திரைப்படத்தின் தகவல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று படத்தின் ஒரு சூப்பர் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருந்தது.
அக்காட்சியில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுவதும் பின் உடனே எழுந்து மறுபடியும் பைக் காட்சியில் நடித்துள்ளார்.
இந்த காட்சி படப்பிடிப்பின் போது கீழே விழுந்த அஜித்ர தன்னை நினைத்துக் கவலைப்படாமல் பைக் என்ன ஆனது பாருங்கள் என்று கூறினாராம்.
மேலும் இந்த பைக்கில் படப்பிடிப்பு நாளைய தினம் இருக்கிறது என்றும் அவர் கவலைகொண்டார் என்று கூறப்படுகிறது.
மேலும் பைக்கில் சேதம் ஏற்பட்டமையால், இதே பைக்கை இந்தியாவில் யார் வைத்துள்ளார் என அறிந்து, அவர்களிடமிருந்து அந்த பைக்கைப் பெற்று அடுத்த நாள் படப்பிடிப்புக்கான காட்சிகள் படமாக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
#CinemaNews