3 42
சினிமா

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் தங்கலான் படத்தின் சென்சார் சான்றிதழ்.. இதோ பாருங்க

Share

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் தங்கலான் படத்தின் சென்சார் சான்றிதழ்.. இதோ பாருங்க

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் தங்கலான். இந்த படத்தின் சென்சார் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்குகிறார்.

இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார், அவருடன் இணைந்து மாளவிகா மோகன், பார்வதி திருவோத்து, டேனியல், ஹரிகிருஷ்ணன் என பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். கேஜிஎஃப் தங்க சுரங்கத்திற்கு அருகில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை தான் தங்கலான் படத்தின் மையக்கரு.

இந்த படம் 1870 – ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை நமக்கு காட்டும். ஆகஸ்ட் 15 வெளிவரவிருக்கும் தங்கலான் படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் என இதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...