tamilni 15 scaled
சினிமா

’கூலி’ படத்திற்காக தீபிகா படுகோன் இடம் பேச்சுவார்த்தை.. கர்ப்பமான நேரத்தில் எப்படி நடிப்பார்?

Share

’கூலி’ படத்திற்காக தீபிகா படுகோன் இடம் பேச்சுவார்த்தை.. கர்ப்பமான நேரத்தில் எப்படி நடிப்பார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு இன்னொரு பக்கம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ’கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட சிலர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சத்யராஜ் உள்ளிட்ட சில பிரபலங்களும் இந்த படத்தில் விரைவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ’கூலி’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது அந்த பாலிவுட் பிரபலம் ரன்வீர்சிங் என்று கூறப்படுகிறது.  இதற்காக ’கூலி’ படக்குழுவினர் ரன்வீர் சிங் மனைவி தீபிகா படுகோன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது.

முதலில் தன்னைத்தான் நடிக்க அழைக்கிறார்கள் என்று தீபிகா படுகோன் நினைத்தபோது அதன் பின்னர் உங்கள் கணவர் எங்கள் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் படக்குழுவினர் கேட்டுக் கொண்டதாகவும் அவரும் கதையை கேட்டு ரன்வீருடன் கலந்து பேசி நல்ல பதில் சொல்வதாக கூறியதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

தீபிகா படுகோன் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் புதிய படங்களை ஒப்புக்கொள்வதில்லை என்ற நிலையில் ரன்வீருக்காக கதை கேட்டு வருவதாகவும் அவர் ’கூலி’ படத்தின் கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆகிவிட்டதாகவும் நிச்சயம் இந்த படத்தில் ரன்வீர் சிங் நடிக்க  அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...