சினிமா

3 லட்சம் கொடுத்தா தான் வருவேன்.. இப்படிப்பட்ட நடிகைகளே தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை: அபர்ணதி மீது சுரேஷ் காமாட்சி புகார்

Share
tamilni Recovered Recovered 6 scaled
Share

3 லட்சம் கொடுத்தா தான் வருவேன்.. இப்படிப்பட்ட நடிகைகளே தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை: அபர்ணதி மீது சுரேஷ் காமாட்சி புகார்

நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். ஜெயில், தேன், இருகப்பற்று போன்ற பல படங்களில் அவர் நடித்து இருந்தார்.

அடுத்து அவர் ஸ்ரீஹரி என்பவரை இயக்கத்தில் நாற்கரப்போர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது.

இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மேடையில் பேசும்போது அபர்ணதி பற்றி கடும் கோபமாக பேசினார்.

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என அழைத்தபோது அபர்ணதி தனக்கு 3 லட்சம் ருபாய் கொடுத்தால் தான் வருவேன் என கூறிவிட்டாராம். வந்தால் மேடையில் தன் அருகில் யார் அமர வேண்டும் உட்பட பல கண்டிஷன்களை அவர் போட்டாராம்.

‘தமிழ் சினிமாவில் சாபக்கேடு இது. நடிகைகள் ப்ரோமோஷனுக்கு வர மாட்டேன் என சொல்கிறார்கள். நானே போன் செய்து பேசினேன். 3 லட்சம் கொடுத்தால் வருவதாக கூறினார். அதன் பின் 2 நாட்கள் கழித்து கால் செய்து மன்னிப்பு கேட்டுவிட்டு நிகழ்ச்சிக்கு வருவதாக கூறினார். ஆனால் இன்று வரவில்லை’.

‘கேட்டால் தான் அவுட் ஆப் ஸ்டேஷன் என கூறுகிறார். அவர் அங்கேயே இருக்கட்டும். இப்படிப்பட்ட நடிகைகளே தமிழ் சினிமாவுக்கு தேவை இல்லை’ என சுரேஷ் காமாட்சி கோபமாக பேசி இருக்கிறார்

Share
Related Articles
10 3
சினிமா

57 வயதில் ரூ. 4600 கோடிக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா

இந்திய சினிமாவில் பணக்கார நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்....

9 3
சினிமா

விஜே சித்து இயக்கத்தில் உருவாகும் புதிய படம்.. கலகலப்பாக வெளிவந்த அறிவிப்பு வீடியோ

Youtube-ல் கலக்கிக்கொண்டிருக்கும் விஜே சித்து சமீபத்தில் டிராகன் படத்தின் மூலம் நடிகராக வெள்ளித்திரையில் கால்பதித்தார். அதை...

6 4
சினிமா

என்னது கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் சிம்பு இணைகிறாரா?.. அதுவும் எதற்காக தெரியுமா?

ஐபிஎல் போட்டி படு வெற்றிகரமாக விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவின்...

8 3
சினிமா

‘காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம்’.. ஓய்வு பெறுவது குறித்து பேசிய அஜித்

சினிமா, கார் ரேஸிங் என இரண்டிலும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறார் அஜித் குமார். சமீபத்தில் பத்ம...