சாதிக்கு எதிராக குரல் கொடுத்த தெருக்குரல் அறிவு
சினிமாசெய்திகள்

சாதிக்கு எதிராக குரல் கொடுத்த தெருக்குரல் அறிவு

Share

சாதிக்கு எதிராக குரல் கொடுத்த தெருக்குரல் அறிவு

தமிழகத்தில் உள்ள நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு பாடகர் தெருக்குரல் அறிவு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவனை வீடு புகுந்து தாக்கிய சக மாணவர்கள்
தமிழகத்தில் உள்ள நாங்குநேரியில் சாதி விரோதம் காரணமாக பிளஸ் 2 படிக்கும் சின்னத்துரை (17) என்ற மாணவனை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியுள்ளனர்.

அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது தாத்தா மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதில், படுகாயம் அடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தெருக்குரல் அறிவு தனது பதிவில்,”சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க, physics chemistry maths எல்லாத்தையும் போல, வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமா சொல்லிக்கொடுங்க!

Anti-Caste மனநிலை மாணவப்பருவத்திலேயே எல்லாருக்கும் கற்பிக்கப்படனும். இடஒதுக்கீடு ஒரு இலவசம் , ஆண்ட பெருமைகள் , சாதி அடையாள கயிறுகள், குறியீடுகள் போன்ற தவறான புரிதல்களை அரும்பிலேயே கிள்ளி எறிவது தான் சமகால கல்வியின் பிரதான நோக்கமா இருக்கணும்.

சாதிய வன்கொடுமைகளில் யாருடைய ரத்தம் காலகாலமாக சிந்திக்கிடக்கிறது என விவாதிக்காமல் , எல்லா ரத்தமும் சிவப்பு என்றும் சாதியை ஒரு ஆபத்தில்லாத பண்பாட்டு வடிவம் என்றும், இருந்தும் இல்லாத ஒன்று என கடந்து போவதும் மேலும் ஆபத்தை வருவிக்கும்!

சக மாணவன் படிப்பதையும் சுயமுன்னேற்றம் அடைவதையும் கூட ஏற்க முடியாத மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்தாமல், தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது” எனக் கூறியுள்ளார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...