சினிமாசெய்திகள்

அமெரிக்க கலை நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட தென்னிந்திய ஹிட் பாடல்! செம்ம ட்ரெண்டிங் வீடியோ

Share

அமெரிக்க கலை நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட தென்னிந்திய ஹிட் பாடல்! செம்ம ட்ரெண்டிங் வீடியோ

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பில் அண்மையில் வெளியன் திரைப்படம் தான் குண்டூர் காரம்.

இந்த படம் எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ளதோடு, இதில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சாவ்திரி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

மகா சங்கராந்தி விழாவில் முன்னிட்டு கடந்த ஜனவரி 12ஆம் தேதி இந்த படம் வெளியாகி, உலக அளவில் 170 கோடிக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைத்திருந்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘குறிச்சி மடதாபெட்டி’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதன் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது வரையில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த நிலையில், இந்தப் பாடல் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் கூடைப்பந்து விளையாட்டின் போது மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளில் கவனம் பெற்றுள்ளது.

அதாவது, குறித்த நடன நிகழ்ச்சியில் கலைஞர்கள் ‘குறிச்சி மடதாபெட்டி’ பாடலுக்கு நடனமாடியுள்ளார்கள். இது தொடர்பிலான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...