சமீபகாலமாகத் தீவிரமான (Serious) கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது அடுத்த படத்தில் மீண்டும் பழைய பாணியிலான முழுநீள பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய சிவகார்த்திகேயன் “சமீப காலமாக நான் ரொம்ப சீரியஸான படங்களில் நடித்து விட்டேன். இதனால் அடுத்ததாக நான் நடிக்கவுள்ள படம் முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கு (Entertainment) அம்சங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது:
வில்லனாக ரவி மோகன் நடிக்க, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜனவரி 10-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
சிவகார்த்திகேயன் தற்போது தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயனின் ‘பொழுதுபோக்கு’ விருப்பத்திற்கு ஏற்ப, இந்தப் படம் நகைச்சுவை மற்றும் அதிரடி கலந்த ஒரு கமர்ஷியல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.