5 48
சினிமாசெய்திகள்

வெங்கட் பிரபு படத்தை waiting – ல் போட்ட சிவகார்த்திகேயன்.. கோட் ரிசல்ட் தான் காரணமா?

Share

வெங்கட் பிரபு படத்தை waiting – ல் போட்ட சிவகார்த்திகேயன்.. கோட் ரிசல்ட் தான் காரணமா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் அமரன்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ளது.

அமரன் படத்தை தொடர்ந்து, அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் நடித்து முடித்த கையோடு சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்டாக சிவகார்த்திகேயன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம்.

இப்படம் முடிந்த பின் சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது 25-வது படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

சூழல் இப்படி இருக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தள்ளிப்போட்ட காரணம் GOAT படத்தின் ரிசல்டாக இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 5 3
செய்திகள்இலங்கை

100 பில்லியன் மேலதிக வருமானம் ஈட்டிய வாகன இறக்குமதி வரிகள்: 2026 நிதித் திட்டங்களை இலகுவாகத் தயாரிக்க முடிந்தது – பாராளுமன்றத் திணைக்களம்!

2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும்...

MediaFile 1 5
செய்திகள்இலங்கை

இலங்கைக்கான புதிய தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் ஐவர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு!

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (நவ 13)...

MediaFile 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் அடம்பனில் 8 வயதுச் சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளிக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை! – நஷ்ட ஈடாக ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவு!

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயதுச் சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்,...

images 4 4
செய்திகள்அரசியல்இலங்கை

இழப்பீடு மீள அறவிடக் கோரும் மனு: முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை மீளப் பெற உயர் நீதிமன்றம் உத்தரவு!

சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் (எம்.பி.க்கள்) இருந்து அந்த...