91259560
சினிமாசெய்திகள்

ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி வியாபாரம் செய்த சிவகார்த்திகேயன் படம்

Share

சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ரிலீஸுக்கு முன்னரே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்துவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ மற்றும் ’டாக்டர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அவரது அடுத்த படத்திற்கு மிகப் பெரிய வியாபாரம் ஆகியுள்ளது.

இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை ரூ.40 கோடிக்கும் தமிழ்நாடு திரையரங்க உரிமை ரூ.45 கோடிக்கும் ஆடியோ உரிமை 4 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேரளா, கர்நாடகா மற்றும் ஹிந்தி டப்பிங் உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவை சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ.100 கோடி இந்த படம் வியாபாரமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

’டாக்டர்’ மற்றும் ‘டான்’ படங்களை அடுத்து ’பிரின்ஸ்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை தரும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#cinemanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...