சிவகார்த்திகேயன் கல்லூரி பருவத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க.
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அமரன் மற்றும் எஸ் கே 23 ஆகிய இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் எஸ் கே 23 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து டான் திரைப்பட இயக்குனர் சிபி சக்ரவத்தியுடன் மீண்டும் சிவகார்த்திகேயன் இணையப்போவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
திரையுலக நட்சத்திரங்கள் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் கல்லூரி படித்த வந்த நேரத்தில் எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இயக்குனர் அருண்ராஜா காமராஜூம் இருக்கிறார்.
Comments are closed.