24 662db79e0746b
சினிமாசெய்திகள்

மாபெரும் வெற்றிப்படத்திற்காக சிவாஜி கணேசன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Share

மாபெரும் வெற்றிப்படத்திற்காக சிவாஜி கணேசன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

நடிப்பின் இலக்கம் என கூறப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் ஹீரோவாக நடித்து வந்த சிவாஜி ஒரு கட்டத்தில் இனிமேல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவேண்டுமென முடிவு செய்கிறார்.

ஹீரோவாக எப்படி முத்திரை பதித்தாரோ, அதே போல் தான் ஏற்று நடித்த ஒவ்வொரு குணச்சித்திர கதாபாத்திரங்களையும் மக்கள் மனதில் பதியவைத்தார். ஆனால், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியபின், தயாரிப்பாளர்களிடம் சம்பளம் குறித்து எதுவுமே பேசமாட்டாராம் சிவாஜி.

தன்னை படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கும் தயாரிப்பாளர்களிடம், இந்த கதாபாத்திரத்திற்கு எவ்வளவு தரவேண்டும் என நினைக்கிறாயோ, அதை மட்டும் கொடு போதும் என கூறிவிடுவாராம்.

அப்படி அவர் நடித்த ஒன்ஸ் மோர் திரைப்படத்திற்காக முதலில் ரூ. 100 மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறார். பின் படத்தின் வியாபாரம் முடிந்த நிலையில், சிவாஜி கணேசனுக்கு ரூ. 10 லட்சம் சம்பளமாக கொடுத்தாராம் எஸ்.ஏ. சந்திரசேகர்.

இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்திற்காக, நடிகர் சிவாஜி கணேசனுக்கு ரூ. 20 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின் ரஜினியுடன் இணைந்து சிவாஜி கணேசன் நடித்த படம் தான் படையப்பா. இப்படத்தில் ரஜினியின் தந்தை கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்திருப்பார். மக்கள் மனதில் இருந்து இன்று வரை நீங்கா இடத்தை இவருடைய கதாபாத்திரம் பிடித்துள்ளது.

இப்படம் வியாபாரம் முடிந்தபின், தயாரிப்பாளரிடம் இருந்து சிவாஜி கணேசனுக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. இதை தனது மகன் ராம்குமாரிடம் கொடுத்துள்ளார். காசோலையை பார்த்த ராம்குமார், அப்பா இதில் ரூ. 1 கோடி என்று போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். தயாரிப்பு தரப்பில் ஒரு பூஜ்யத்தை அதிகமாக போட்டிருப்பார்கள். ரூ. 10 லட்சம் தான் சம்பளமாக இருக்கும் என சிவாஜி கூறியுள்ளார்.

பின் தயாரிப்பாளருக்கு போன் கால் செய்து பேசிய சிவாஜி கணேசன், காசோலையில் ரூ. 1 கோடி என தவறாக சம்பளம் போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் தரப்பு, இல்ல சார் சரியாக தான் போட்டிருக்கும், ரஜினிகாந்த் சார் தான் உங்களுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்க சொன்னார் என கூறினார்களாம்.

இந்த விஷயம் நடந்த பிறகு, ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்து சிவாஜி கணேசன் கடிதம் கூட எழுதினாராம். நாம் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும், நம்முடைய மூத்த கலைஞரை எப்படி மதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்தை பார்த்து தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...