சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது கர்பத்தை மறைத்து வந்தாலும், அவர் ஹாஸ்டலில் இருக்கும் பெண்கள், வார்டன் என எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
அவரது அக்கா திருமணம் வரை தனக்கு இருக்கும் பிரச்சனை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என ஆனந்தி எல்லோரிடமும் கூறிவிட்டார்.
திருமணத்தில் பங்கேற்க கம்பெனியில் லீவு சொல்லிவிட்டு முன்பே ஆனந்தி செல்ல, உடன் பணியாற்றும் எல்லோரும் திருமணத்திற்கு வருகிறார்கள். ஆனந்தியின் காதலர் அன்புவும் வருகிறார்.
அன்புவை நேரில் பார்த்தபோது கூட ஆனந்தி பெரிதாக கண்டுகொள்ளாமல் தள்ளிப்போய் விடுகிறார். ஆனால் அதன் பிறகு அன்பு கையில் தாலி உடன் வந்திருப்பது ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
ஆனந்தி அக்கா மட்டுமல்ல ஆனந்திக்கும் திருமணம் நடக்கும் என தெரிகிறது. அப்படி ஒரு திட்டத்துடன் தான் அன்பு வந்திருக்கிறார்.