4 32
சினிமா

ரெட் கார்டு பிரச்சனை.. தக் லைஃப் மேடையில் கண்கலங்கி பேசிய நடிகர் சிம்பு

Share

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் – சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பலரும் நடித்துள்ளனர்.

நேற்று மாலை இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. படக்குழுவினர் அனைவரும் மேடையில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.

இதில் நடிகர் சிம்பு தனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மணி ரத்னம், கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்தார். பின் தன்னுடன் நடித்தவர்கள் குறித்தும், தனது ரசிகர்களை பற்றியும் பேசினார்.

ரெட் கார்டு பிரச்சனை பேசிய சிம்பு, “என் மேல ரெட் கார்டு போடுற சூழல் வந்தது. அப்போது என்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பயந்தாங்க. அப்போ என்னை அழைத்து எனக்கு செக்க சிவந்த வானம் படத்தை கொடுத்தவர் மணி ரத்னம். அதை நான் என்றும் மறக்க மாட்டேன் சார். ரொம்ப நன்றி” என நெகிழ்ச்சியாக கூறினார்.

பின் தனது தாய் மற்றும் தந்தை குறித்து பேசிய சிம்பு, “எனது தந்தை டி. ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ராஜேந்தர் இருவருக்கும் என்னுடைய நன்றி. பிறந்ததிலிருந்து எனக்கு நடிக்க சொல்லிக்கொடுத்து, ஒரு பக்கம் படிக்கணும் மறுபக்கம் நடிக்கணும், ஏன் என்னை இவ்வளவு கஷ்டப்படுத்துறாங்க என்று நினைப்பேன். ஆனா இன்னிக்கி ஒரு 40 வருஷம் கழிச்சு கமல் சாரோட நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு” என கூறி கண்கலங்கி பேசினார்.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...