33 6
சினிமா

புதுப் பையன் இல்லை, உங்கள் வேலையை பாருங்கள்.. கமலுக்கு சிம்பு கொடுத்த அதிரடி ரிப்ளை

Share

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ஜூன் 5 – ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்படத்தில் கமல் உடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார். முதல் முறையாக இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இப்படத்தில் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கமல்ஹாசன் சிம்பு குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “சென்ற தலைமுறையைப் போலவே இந்த தலைமுறை நடிகர்களும் வளர்ந்து வருகின்றனர்.

சிம்பு செட்டுக்கு வரும் போது நீ ஒரு லெஜெண்டிடம் இணைந்து நடிக்க போகிறாய் என அனைவரும் கூறுவர். நான் அவரிடம் சென்று இது குறித்து பயப்படாதே என்றேன். அதற்கு சிம்பு, நானும் புதுப் பையன் என நீங்களும் நினைத்து விடாதீர்கள். உங்கள் வேலையை ஒழுங்காக பாருங்கள் என கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...