25 6846be59e0245
சினிமாசெய்திகள்

கமல் – சரிகா விவாகரத்து குறித்து பேசிய மகள் ஸ்ருதி ஹாசன்.. என்ன சொன்னார் என்று பாருங்க

Share

நடிகர் கமல் ஹாசன் – நடிகை சரிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹசான் என்ற இரு மகள் உள்ளனர். இவர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் தனது பெற்றோர்களின் விவாகரத்து குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

தாய் – தந்தை பிரிவு குறித்து பேசிய ஸ்ருதி, “தாய் – தந்தையின் பிரிவு எனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தை கற்று தந்தது. குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது” என்று அவர் கூறியுள்ளார்.

“தனது அம்மா சரிகா குறித்து பேசிய ஸ்ருதி, “என் அம்மா சரிகா விவாகரத்துக்கு பின் தன்னம்பிக்கையுடன், தைரியமாக நின்று தனது வாழ்க்கையை மருவடிவமைத்த விதம் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. இந்த சம்பவம் ஒரு பெண் உணர்ச்சி ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவு பெற்றிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியது. அது என் வாழ்க்கையின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக மாறியது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...