ஜவான் படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
இந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ஜவான்.
பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செல்வவில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் இணையத்தை அதிரவைத்தது.இதன்பின் எப்போது ஜவான் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஜவான் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் வாங்கிய சம்பளம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது கதாநாயகன் ஷாருக்கான் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் என்பதினால் வழக்கத்தை விட கம்மியாக தான் சம்பளம் வாங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர். ஜவான் படத்திற்காக ஷாருக்கான் ரூ. 100 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது
Leave a comment