OIF 1
சினிமாசெய்திகள்

செல்பி போதும்.., நிவாரண பொருட்கள் வேண்டாம் என்ற பெண்: கடுப்பான விஜய்

Share

நெல்லையில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய போது நடிகர் விஜயிடம் செல்பி போதும், நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கூறிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் திகதிகளில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் இன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் தொடர்ந்து ஒவ்வொருவராக விஜயிடம் நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.

அப்போது வந்த ஒரு பெண் விஜயின் காலில் விழுந்தார். இதனையடுத்து அந்த பெண் போனில் செல்ஃபி எடுப்பதில் மும்மரமாக இருந்தார்.

அதை பார்த்து விஜய் டென்ஷன் ஆனார். செல்ஃபி எடுத்த பின்னர், அந்த பெண் நிவாரண பொருட்களை வாங்காமல் செல்ல, பொருட்கள் வேண்டாமா என்று விஜய் கேட்டார்.

அதற்கு அந்த பெண் வேண்டாம் என்று சொல்ல,விஜய் அந்த பெண்ணை போ…போ.. என்று சொன்னார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...