நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனது 03 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறியிருந்தார்
இருவரது விவாகரத்துக் குறித்துபல வதந்திகள் வெளியாகியிருந்த போதும், ஆனால் விளக்கங்கள் எவையும் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது சமந்தா நாக சைதன்யாவின் மாமன் மகனான நடிகர் ராணா டகுபதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நடிகை சமந்தாவின் பிறந்தநாள் பதிவானது, மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.
பிறந்தநாள் கொண்டாடிய ராணாவை குறிப்பிட்டு சமந்தா, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ராணா. உங்களுக்கு வாழ்க்கையில் சிறப்பானவை மட்டுமே கிடைக்கட்டும். உடல் பலமும், நல்ல உள்ளமும் கொண்ட கடவுளுக்கு விருப்பமான மனிதர் நீங்கள்’ என வாழ்த்தியுள்ளார்.
இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் முன்னாள் கணவரின் குடும்பத்தினருடன் நட்பில் தான் இருக்கிறீர்களா? எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.
#CinemaNews