இரண்டு நாட்களில் ரத்னம் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

24 662dbe451593e

இரண்டு நாட்களில் ரத்னம் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் இந்த நடிகரும், இந்த இயக்குனரும் இணைந்தால் கண்டிப்பாக அந்த படம் மாபெரும் அளவில் வெற்றியடையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுவதுண்டு.

அப்படி ஒரு மாஸ் கூட்டணி தான் விஷால் – ஹரி. இவர்கள் இருவரும் முதன் முதலில் தாமிரபரணி படத்திற்காக இணைந்தனர். முதல் படம் இந்த கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது.

இதை தொடர்ந்து இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் பூஜை. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மூன்றாவது முறையாக ஹரி – விஷால் கூட்டணியில் உருவாகி கடந்த 26ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் தான் ரத்னம். மாஸ், ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மக்களிடையே வரவேற்பை பெற்று வரும் இப்படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரத்னம் திரைப்படம் உலகளவில் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Exit mobile version