3 12 scaled
சினிமாசெய்திகள்

பணக்கஷ்டம்! சொத்துக்களை விற்க நினைத்த கே. பாலசந்தர்.. ரஜினிகாந்த் செய்த வேலை

Share

பணக்கஷ்டம்! சொத்துக்களை விற்க நினைத்த கே. பாலசந்தர்.. ரஜினிகாந்த் செய்த வேலை

ரஜினிகாந்த், கமல் ஹாசன் என இரு மாபெரும் நட்சத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் கே. பாலசந்தர்.

கமெர்ஷியல் படங்கள் மட்டுமல்லாமல், வித்தியசமான கதைகளை வைத்து படம் இயக்கி வந்த கே. பாலசந்தருக்கு அவருடைய 80வது வயதில் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.

பணக்கஷ்டம் ஏற்பட்டு, தனது சொத்துக்களை விற்கும் அளவிற்கு சென்றுள்ளார் கே. பாலசந்தர். இதை பக்கத்தில் இருந்து பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இப்படியொரு விஷயம் நடக்கிறது, உங்களுடைய குருநாதர் கஷ்டத்தில் இருக்கிறார் என ரஜினியிடம் கூறியுள்ளார்.

உடனடியாக ரஜினிகாந்த் தனது குருநாதருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன், கே. பாலசந்தரின் தயாரிப்பில் குசேலன் திரைப்படத்தில் நடித்து கொடுத்துள்ளார். இது கே. பாலசந்தருக்கு பெரும் உதவியாக இருந்துள்ளதாம்.

இப்படிப்பட்ட மனிதன், அவருக்கும் இருக்கும் குருபக்தி, இதனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலம் காலமாக நிலைத்து நிற்பார் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...

23 647c485e82c25
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு 50 மில்லியன் டொலர் நிதியுதவி: உலக வங்கி அதிரடி அங்கீகாரம்!

இலங்கையின் அரச நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘இலங்கை டிஜிட்டல் பரிமாற்றத்...