tamilni 386 scaled
சினிமாசெய்திகள்

திருமணத்திற்கு பின் 65 கிலோவை சுமக்கும் ரகுல் ப்ரீத் சிங் .. வைரல் வீடியோ..!

Share

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் 65 கிலோ எடையை தூக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு ’யுவா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’தடையறத் தாக்க’ ’என்னமோ ஏதோ’ உள்பட சில தமிழ் படங்களில் மட்டும் நடித்தார்.

அதன் பிறகு அவர் தெலுங்கில் ரகுல் ப்ரீத் சிங் பிஸியான நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். அதன் பின்னர் கார்த்தி நடித்த ’தேவ்’ சூர்யா நடித்த ’என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தற்போது சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ’அயலான்’ படத்தில் தாரா என்ற முக்கிய கேரக்டரில் நடித்தார்.

தற்போது அவர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உட்பட சில படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஜாக்கி பாக்லானி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் கோவாவில் நடந்த இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் ரகுல் ப்ரீத் சிங் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் 23 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 65 கிலோ எடை தூக்கும் வீடியோவையும், ரிஸ்க் எடுத்து வொர்க் அவுட் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...